தற்போது, இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையில் உள்ளது. கொரோனா முக்கியமாக சுவாச அமைப்பை பாதிக்கிறது. கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சையானது படிப்படியாக அவர்களின் நோயேதிர்ப்பு சக்தியைக் குறைக்கிறது. இவ்வாறு, நோயேதிர்ப்பு சக்திக் குறையும் பொழுது கருப்பு பூஞ்சை நம்மை தக்க எளிதாக மாறிவிடுகிறது. ஒரு கொரோனா நோயாளி கருப்பு புஞ்சையால் தாக்கப்பட்டால் அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக மாறிவிடும். கருப்பு பூஞ்சை வழக்குகள் இந்தியா முழுவதும் வழக்கமாக ஒரு வருடத்திற்கு சுமார் 10 வழக்குகளே இருக்கும். ஆனால், இந்த தொற்றுக் காலத்தில், இதன் ஆற்றல் பெரிதும் பெறுகிருக்கிறது. கர்நாடகாவில் 700 வழக்குகளும், ஹரியானாவில் 421 வழக்குகளும், தமிழகத்தில் 258 வழக்குகளும் பதிவாகியுள்ளன.
கேள்விகள்:
- கருப்பு பூஞ்சை என்றால் என்ன?
- இது நம் உடலை எவ்வாறு தாக்குகிறது?
- இது ஏன் நம் உடலை பாதிக்கிறது?
- ஏன் அதிகமாக கொரோனா நோயாளிகள் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள்?
- கருப்பு பூஞ்சையின் அறிகுறிகள்
- கொரோனா நோயாளிகளைத் தவிர வேற யாரெல்லாம் பெரிதும் பதிப்படைகிறார்கள் ?
- இதற்கான சிகிச்சை என்ன?
- ஏன் இந்தியர்கள் கருப்பு பூஞ்சை நோயால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்?
- வெள்ளை பூஞ்சையைப் பற்றி ஒரு பார்வை
- ஒரு சிறப்பு குறிப்பு
கருப்பு பூஞ்சை (முக்கார்மைகொசிஸ்)
கருப்பு பூஞ்சை என்பது ஒரு வகை காளான் பூஞ்சை ஆகும். இது ஒரு தொற்று ஏற்படுத்தக்குடிய அரிதான பூஞ்சை நோய். இவை ரொட்டிகளின் மேல் படரும் பூசணம் போல் உருவாகும்.
கருப்பு பூஞ்சை உடலை எவ்வாறு தாக்குகிறது?
இது பொதுவாக நம் வாழும் அனைத்து சுற்றுப்புற இடங்களிலும் இருக்கும். பெரும்பாலான மக்கள் அவர்களுக்கே தெரியாமல் இந்த நுண்ணிய பூஞ்சை சிதல்கள் தன் உடலுக்குள் சென்று விடுகின்றன. இது மூலம் நம் கண்கள், மூக்கு, மற்றும் வாய் வாயிலாக உடலுக்குள் செல்கின்றன. இந்த சிதல்கள் எவ்வழியாக செல்கிறதோ அவ்விடத்தில் அது பரவ ஆரம்பித்து அந்த உருப்புகளுக்கு பதிப்பு ஏற்படுத்துகிறது. ஆனால், கொரோனா காலத்திற்கு முன் இதனால் பெரிதும் மக்களுக்கு நோய் எதுவும் வருவதில்லை. இது நம் பொது வாழ்வில் எளிதாக கடந்து போகும் ஒரு விஷயம் ஆகவே இருந்தது. ஆனால், இப்பொழுது இதனால் மக்கள் பெரிதும் பதிப்பு அடைகின்றன.
கருப்பு பூஞ்சை உடலை ஏன் பாதிக்கிறது?
பொதுவாக, இந்த சிதல்கள் வாழும் சூழலில் தான் மக்கள் நாமும் வாழ்கின்றோம் . ஆனால், ஆரோக்கியமான நோயெதிர்ப்பு அமைப்பு காரணமாக இந்த பூஞ்சைகளால் நாம் பாதிக்கப்படுவதில்லை. இருப்பினும், கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சையால் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைவதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
ஏன் அதிகமாக கொரோனா நோயாளிகள் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள்?
அனைத்து கொரோனா நோயாளிகளும் இந்த நொய்யல் பதிப்பு அடைவதில்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் சிலர் அவர்களின் எதிர்ப்பு சக்தி குறைவதான் காரணமாக அவர்களுக்கு இது போன்ற சிறிய நோய்கள் எளிதில் தாக்கப் படுகிறார்கள். மேலும், சில கொரோனா நோயாளிகள் மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருப்பவர்களுக்கு வேறு வழி இன்றி மருத்துவர்கள் ஸ்டெராய்டுகளைச் செலுத்துகின்றன. ஏனென்றால், இவர்களின் உடல் கொரோனா நோயால் மிகவும் பலவீனம் அடைகிறார்கள். ஆகவே, அவர்களுக்கு சக்தியை கூட்டுவதரக்காக ஸ்டெராய்டுகளைப் பயன்படுத்துகின்றன. ஆனால், நோயெதிர்ப்பு சக்தியை மேலும் பலவீனப்படுத்துகின்றன.
கருப்பு பூஞ்சையின் அறிகுறிகள்:
கருப்பு பூஞ்சை அறிகுறி பூஞ்சை வளர்ச்சியின் இடத்தை பொறுத்தது உடலில், கண் இமைகள் வழியாக சிதல்கள் நுழைந்திருந்தால், அது கண்ணைச் சுற்றியுள்ள பகுதியைப் பாதிக்கும், நாசிப் பாதை வழியாக சிதல்கள் நுழைந்திருந்தால், அது நுரையீரலில் பாதிக்கும்.
நுரையீரலில் பாதித்திருந்தால் அதன் அறிகுறிகள்:
- காய்ச்சல்
- இருமல்
- நெஞ்சு வலி
- மூச்சுத் திணறல் (டிஸ்ப்னியா)
மூளை, சைனஸ் பாதித்திருந்தால் அதன் அறிகுறிகள்:
- தலைவலி
- காய்ச்சல்
- மூக்கடைப்பு
- நாசி பாலத்தில் கருப்பு புண்
தோலில் தெரியும் அறிகுறிகள்:
- தோள் மற்றும் தொடையில் திட்டுகள்
- கண்ணைச் சுற்றி திட்டுகள்
- காயத்தை சுற்றி வீக்கம்
கொரோனா நோயாளிகளைத் தவிர வேற யாரெல்லாம் பெரிதும் பதிப்படைகிறார்கள் ?
நீரிழிவு நோய், புற்றுநோய், இதய நோயாளிகள், உறுப்பு மாற்றுப்பட்ட நோயாளிகள், குறைந்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை உடையவர்கள், உடலில் இரும்புச் சத்து அதிகமாக இருப்பவர்கள் பெரிதும் பதிப்படைகிறார்கள். அதுமட்டுமின்றி, உடலில் அடி பட்டவர்கள் மற்றும் உசி வழியாக போதை மருந்துகளை எடுத்தக்கொள்ளும் நபர்கள் பெரும்பலாக பதிப்பு அடைகிறார்கள்.
கருப்பு பூஞ்சை சிகிச்சை முறை:
கருப்பு பூஞ்சை, கொரோனா வைரஸைப் போல் குணப்படுத்த முடியாத நோய் அல்ல. அதற்கு அம்பொதெரிசின் பி, இசவுகொனாஜோல் போன்றப் பூஞ்சை காளான் மருந்துகள் மூலம் குணப்படுத்த முடியும். இந்த மருந்துகள் வாய்வழி மூலமும் உசி வழியாகவும் போடப்படும். ஆனால், இது மோசமான நிலைக்கு சென்றால், இதனால் பாதிக்கபட்ட திசு வெடித்துவிடும்.
ஏன் இந்தியர்கள் கருப்பு பூஞ்சை நோயால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்?
சில ஆய்வாளர்களின் ஆய்வுகளின் படி, இந்தியர்கள் அதிகம் பேருக்கு நீரிழிவு நோய் இருப்பதும், அது கொரோனா காலக்கட்டதில் பெரிதும் கட்டுக்குள் கொண்டு வராத காரணத்தினால் கருப்பு பூஞ்சை பரவ காரணமாக இருக்கலாம் எனக் கருதுகிறார்கள். இந்தியாவில் பி1.617 மரபான மற்றபட்ட வைரஸால் கூட அதிக தொற்று இருந்திருக்கலாம் எனக் கூறுகின்றன.
வெள்ளை பூஞ்சையைப் பற்றி ஒரு பார்வை:
கருப்பு பூஞ்சை தவிர, வெள்ளை பூஞ்சை என்று ஒன்று உள்ளது, தற்பொழுது திடீரென இந்தியாவில் வெள்ளை பூஞ்சை வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. பாட்னாவில் 4 வழக்குகள் மற்றும் ஜபல்பூரில் ஒரு வழக்கும் வெள்ளை பூஞ்சை தொற்றுக்கு பதிவாகியுள்ளன. கருப்பு பூஞ்சை போலவே, இது தொற்றுநோயல்ல, ஆனால் நோயாளிகளால் எளிதில் தொற்றுக்கு ஆளாகிவிட முடியும்.
ஒரு சிறப்பு வழக்கு
சில நாட்களுக்கு முன்பு, கொரோனா நோயிலிருந்து மீட்கப்பட்ட ஒருவரின் உடலில் 3 வகையான பூஞ்சை இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. இந்த அறிய நிகழ்வு உத்தரபிரதேசத்தில் தெரிவிக்கப்பட்டது. நோயாளிக்கு கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை மற்றும் மஞ்சள் பூஞ்சை ஆகியவை உள்ளன. கொரோனா நோயிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, அவர் கண்களுக்கு அருகில் வீக்கம் இருப்பதாகக் கூறி அவர் இரண்டு நாட்களுக்குப் பிறகு திரும்பி அதே மருத்துவமனைக்கு வந்தார். அவரை பரிசோதித்தப் பிறகு, மருத்துவர் மூன்று பூஞ்சைகளைக் கொண்டிருப்பதாகவும், இது மிகவும் அரிதான வழக்கு என்றும், இந்தியா முழுவதும் ஒரே ஒரு வழக்கு மட்டுமே இருப்பதாகவும் தெரிவித்தார்.
குறிப்பு:
- இதில் குறிப்பிடப்படும் மருந்தகளைப் பயன்படுத்த எவ்விதத்திலும் இவ்விடுக்கையில் குறிப்பிடப்படவில்லை.
- இவை அனைத்தும் செய்திப் பரிமாற்றத்திற்கு மட்டுமே.
"முகக்கவசம் அணிவோம் கொரோனா தொற்றிலிருந்து நம்மை காப்போம்"
5 Comments
மிகவும் பயனுள்ள பதிவு
ReplyDeleteஉதவிகரமாக பதிவு
ReplyDeleteகைகளை நன்றாக சுதம்செய்யவும், முக கவசம் எப்பொழுதும் வெளியே செல்லுகையில் அணியவேண்டும்.
ReplyDeleteஅரசாங்கம் இந்த கொடிய நோயின் தாக்கத்தை குறைக்க வழிவகுக்கவேண்டும்
ReplyDeleteநல்ல தகவல்
ReplyDeleteWelcome to News and Facts Tamil. If you like the content, feel free to comment on the above comment section. It will be grateful and encouraging to us for more blogs.