NFT Latest News #2 | Adani Groups Airport Holdings

NFT Adani Airport Holdings

மும்பை விமான நிலையத்தை கையகப்படுத்தியது அதானி குழுமம்

வணிகம்

செவ்வாய் கிழமை அதானி குழுமம் மும்பை விமான நிலையாத்தின் கட்டுப்பாடுகளை பெரும்பான்மையான 74 சதவீத பங்குகளை வாங்கி கையகப்படுத்தியது மற்றும் மீதம் உள்ள 26 சதவீத பங்குகளை இந்திய விமான நிலைய ஆணையம் கையகப்படுத்தி வைத்துள்ளன.

அதானி குழுமம் அடுத்த மாதம் நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தை கட்டிட பணி துவங்கும் மற்றும் அடுத்த 90 நாட்களில் நிதி மூடல் முடிக்கப்படும். 2024 ஆம் ஆண்டு இந்த விமான நிலையம் நியமிக்கப்படும் என்று உள்கட்டமைப்பு முக்கிய அதிகாரிகள் கூறுகின்றன.

ஜூலை 13 ஆம் தேதி, கௌதம் அதானி “நாங்கள் உலக தர மும்பை விமான நிலையாத்தின் கட்டுப்பாடுகளை கையகப்படுத்தியதில் மகிழ்ச்சி கொள்கிறோம். நாங்கள் மும்பையை பெருமைபட செய்வோம். அதானி குழுமம் எதிர்கால வணிகத்திற்காக ஓய்வுக்காக பொழுதுபோக்குக்காக விமான நிலைத்தின் சுற்றுச்சூழல் அமைப்பு கட்டமைக்கும். நாங்கள் ஆயிரக்கணக்கான புது உள்ளூர் வேலைவாய்ப்புக்கள் உருவாக்குவோம்” என்று ட்வீட் செய்துள்ளார்.


அமசோன் பிரைம் உறுப்பினர்களுக்கு ஆடிபிள் (Audible) நான்கு மாத சந்தா ரூபாய் இரண்டுக்கு வழங்கப்படுகிறது

தொழில்நுட்பம்

புதிய சலுகை ஆடிபிள் மக்களுக்காக வழங்குகிறது. ஆடிபிள், அமசோன் நிறுவனத்திற்கு சொந்தமான அமெரிக்கா வலைதள ஒலி புத்தகம் மற்றும் வலையொளி சேவை. இந்த சேவை அமசோன் பிரைம் 2021 சலுகை தினத்தின் ஒரு பகுதியாக நான்கு மாத சந்தா ரூபாய் இரண்டுக்கு அறிவிக்கப்பட்டது. இந்த சலுகை அமசோன் பிரைம் உறுப்பினார்களுக்கு மட்டும் தான். இந்த சலுகையின் செல்லுபடி நிலை ஜூலை 12 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 தேதி வரை இருக்கும்.

ஒலி புத்தகங்கள் பழ விலை அமைப்பில் வழங்கபடுகிறது மற்றும் ஒரு மாத சந்தா இலவசம். பயனர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு ஒலி புத்தகத்தை இலவசமாக கேட்டு மகிழலாம். அமசோன் கிரெடிட் மூலம் சந்தா பயனர்கள் ஒலி புத்தகங்களை இலவசமாக வாங்கலாம். அமசோன் பிரைம் உறுப்பினார்கள் தொண்ணூறு நாள் இலவச ஆடிபிள் சந்தா பெற்றுக்கொள்ளாம்.


கவுண்டி கிரிக்கெட்டில் ஈர்க்கக்கூடிய ஆறு விக்கெட்டுகளை எடுத்த அஷ்வின்

விளையாட்டு

இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் ஐசிசி-யின் சிறந்த டெஸ்ட் முன்னணி பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருப்பவர் இவர். ரவிசந்திரன் அஷ்வின் சர்ரே கவுண்டி கிரிக்கெட் சங்கத்தில் இணைந்தார். இங்கிலாந்தில் தற்போது கவுண்டி கிரிக்கெட் நடைபெற்று வருகிறது. அதில் ஜூலை 11ம் தேதி சர்ரேவுக்கும் சோமர்செட் கவுண்டி கிரிக்கெட் சங்கதிர்க்கும் போட்டி துவங்கியது. இந்த போட்டியில் அஷ்வின் சர்ரேவுக்காக விளையாடி வருகிறார்.

ஓவல் மைதானத்தில் நடந்த இந்த போட்டி இரண்டாவது ஆட்டப்பகுதியில் அஷ்வின் ஆறு இலக்குகளை (wickets) எடுத்து சென்றார். 31க்கு 3 என்று ஸ்டீவன் டேவிஸ், டாம் லம்மோன்பி மற்றும் ஜேம்ஸ் ஹில்ட்ரெத் விக்கெட்டுகளை எடுத்தார். ஜார்ஜ் பரலேட் பவுல்டாகி வெளியேறினார் இது அசகவினின் நான்காவது பலி. ஐந்தாவதாக மேரவேவை வீழ்த்தினார் போட்டியின் நான்காவது நாளில்.

இரண்டாவது அமர்வில் மார்சண்ட் டே லங்கேவை வீழ்த்தி ஆறாவது விக்கெட்டை எடுத்தார் அஷ்வின். அஷ்வின் பவுல்ட் செய்த காணொளியை பலராலும் பகிறபட்டு வருகின்றன.


கனா காணும் காலங்கள் தொடருக்கு ரீயூனியன் செய்யவிருக்கிறது விஜய் தொலைக்காட்சி!!

சின்னத்திரை

சில வருடங்களுக்கு முன் ஒளிபரப்பான விஜய் தொலைக்காட்சி நாடகங்களுக்கு இப்போது உள்ளதை விட அதிக வரவேற்பு இருந்தது. விஜய் தொலைக்காட்சியில் பல நல்ல நிகழ்ச்சிகளும் நாடகங்களும் மக்களை அதிகம் ஈர்க்கும் வகையில் இருந்தது. புது புது கருத்துகளுடன் நிறைய நிகழ்ச்சிகள் விஜய் தொலைக்காட்சி தனது தொடக்கக் காலத்தில் ஒளிபரப்பு செய்தன. கனா காணும் காலங்கள், ஆபீஸ், சரவணன் மீனாட்சி, 7C போன்ற பல நாடகங்கள் மக்களை கவரும் வண்ணம் இருந்தது. அதிலும் குறிப்பாகச் சரவணன் மீனாட்சி ஒளிபரப்பான காலத்தில் பல மக்களின் ரிங்டோனாக இருந்தது. அது ஒரு காலம். விஜய் தொலைக்காட்சியின் மாபெரும் வெற்றிக்கு தொடக்கக் காலத்தில் அவர்கள் தயாரித்த கனா காணும் காலங்கள் நாடகத்திற்கு பெறும் பங்குண்டு. அதில் நடித்த பல நட்சத்திரங்கள் இன்று படங்களில் நகைச்சுவை நடிகர்களாகவும் பல நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளராகவும் உயர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நாடகத்தின் மீண்டும் இணையும் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் வரும் 18 ஜூலை அன்று ஒளிபரப்பாகப் போகிறது.


இரண்டு டோஸ் போட்டுக்கொண்டவர்களுக்கு டெல்டா வகை கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பு என ஈரோப்பிய சுகாதாரத்துறை கூறுகிறது!!

ஆரோக்கியம்

வேகமாக பரவி வரும் டெல்டா வகை கொரோனா வைரஸால் ஈரோப்பிய மருத்துவத்துறை மக்கள் அனைவரையும் விரைவில் தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ள வேண்டும் என்று வளியுறுத்தியுள்ளது. தற்போதைய நிலையில் இரண்டு டோஸ்களுக்கு இரண்டு வகையான கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாமா வேண்டாமா என்ற தெளிவில்லாத முடிவில் ஈரோப்பிய மருத்துவ அமைப்பு இருக்கிறது. இந்த டெல்டா வகை கொரோனா வைரஸ், ஆல்பா வகை கொரோனா வைரஸை விட 40 முதல் 60 சதவீதம் வரை அதிவேகமாக பரவக்கூடும் என்று ஆய்வுகள் கூறுகிறது. ஆனால், டெல்டா வகை கொரோனா வைரஸ் ஈரோப்பிய முழுவதும் பரவும் முன் மக்களைத் தடுப்பூசி போடவைக்க வேண்டும் என்பதால் தடுப்பூசி பற்றாக்குறை இருப்பினும் முதல் டோஸ்கும் இரண்டாம் டோஸ்கும் வேறு வேறு கொரோனா தடுப்பூசிகள் போட்டுக்கொள்ளலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது போன்ற நடைமுறை வரலாற்றில் வேறு வித தடுப்பூசிகளுக்கு நடந்துள்ளது எனக் கூறுகிறது.


மேலும் இது போன்ற சமீபத்தியது தமிழ் செய்திகளை தெரிந்து கொள்ள, News And Facts தமிழ் பின்தொடரவும்.

இவ்விடுக்கை பிடித்திருந்தால், கீழ் கண்ட ஏதேனும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக பகிரவும்.

0 Comments

Welcome to News and Facts Tamil. If you like the content, feel free to comment on the above comment section. It will be grateful and encouraging to us for more blogs.