திறன்பேசி (ஸ்மார்ட் ஃபோன்) நமது அன்றாட வாழ்வில் மிகவும் அத்தியாவசியமான பொருளாக மாறிவிட்டது. திறன்பேசி இல்லாத மக்கள் இவ்வுலகில் மிகவும் குறைவான ஆட்களே உள்ளன. குறிப்பாக, ஒரு குடும்பத்தில் ஒருவராவது திறன்பேசி வைத் திருப்பர். ஆனால், அந்த திறன்பேசியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா என்பது கேள்வி குறி தான்? எனவே, இவ்விடுக்கையில் நாம் திறன்பேசி பயன்படுத்தும் பொது செய்யும் சிறிய தவறுகளைப் பற்றி பார்ப்போம்.
மூன்றாம் தரப்பு செயலிகள்:
மூன்றாம் தரப்பு செயலிகள் (Third Party Apps) என்பது கூகிள் பிளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்யாமல் வேறு தளங்களிலுருந்து செயலிகளைப் பதிவிறக்கம் செய்தால், அந்த செயலியை மூன்றாம் தரப்பு செயலிகள் என்று அழைக்கப்படுவர். இது போன்ற செயலிகள் கூகிள் அல்லது ஆப்பிள் நிறுவன தரப்பிலிருந்து அங்கீகரிக்கப்படாத செயலிகள் என்பதால் இந்த செயலிகள் மூலம் வரும் பிரேச்சனைகளுக்கு நாம் மற்றுமே பொறுப்பாக முடியும்.
மூன்றாம் தரப்பு செயலிகளை நீங்கள் பதிவிறக்கம் செய்வதில் தவறில்லை. உதாரணத்திருக்கு, நீங்கள் இது போன்ற செயலியை குரோம் உலாவி (Chrome Browser) மூலம் பதிவிறக்கம் செய்யும்பொழுது உங்களிடம் ‘அறியாத மூல நிறுவல்களிலுருந்து பதிவிறக்க ‘Chrome’ அனுமதிக்கலாமா’ எனக் கேட்கும். அதற்கு, நீங்கள் அனுமதி என்று கொடுத்துவிட்டு பயன்படுத்த ஆரம்பித்துவிடுவீர்கள். ஆனால், பதிவிறக்கம் செய்த பின் அதை தடை கொடுக்க மறந்துவிடுவீர்கள். இது நம்மை அறியாமல் மிகவும் ஆபத்தானச் செயலிகளைத் தானாகவே பதிவிறக்கம் செய்துகொள்ள வாய்ப்புள்ளது. இதனால், நமது தரவுகளுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடும். ஆகையால், மறக்காமல் பதிவிறக்கம் செய்த பின் அதை தடை செய்துவிடுங்கள்.
செயலி புதுப்பித்தல்:
நம் திறம்பேசியில் இருக்கும் செயலிகளை உடனுக்குடன் புதுப்பித்தல் (app update) வேண்டும். ஏனெனில் உங்கள் செயலியில் பிழை இருக்கலாம். அதை சரி செய்யவே செயலி நிறுவாகத்தின் மூலம் செயலி புதுப்பிப்பு கொடுத்திருப்பார்கள். இந்த பிழைகளால் உங்கள் திரன்பேசியின் வேகம் குறையலாம் அல்லது உங்கள் சார்ஜ் வேகமாக குறையலாம். இதனால் உங்கள் திறன்பேசி அதிக வெப்பம் அடைய வாய்ப்புள்ளது. எனவே, செயலி புதுப்பிப்பை உடனே செய்திருத்தல் வேண்டும். உங்கள் செயலிகள் புதுப்பிப்புடன் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள நீங்கள் பிளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோர் இற்கு சென்று மேல் வலது மூலையில் உங்கள் சுயவிவர படத்தை அழுத்தி அதில் எனது ஆப்ஸ் மற்றும் கேம்ஸ் ஐ கிளிக் செய்தால் புதுப்பிக்கப் படாமல் இருக்கும் செயலிகளை அங்கு காணமுடியும். அதில் யவை புதுப்பிக்க படவில்லையோ அதை புதுப்பித்துக் கொள்ளுங்கள்.
உங்கள் திரணபேசியில் பாதுகாப்பு இணைப்பு (security patch update) புதுப்பிக்கப் பட்டதுள்ளதா என்று காவணியுங்கள். ஏனெனில் உங்கள் திரன்பேசியில் இருக்கும் அவ்வபோது நல்லடைவில் சில பிழைகள் ஏற்படலாம். அதை சரி செய்யவே இந்த பாதுகாப்பு இணைப்பு புதுப்பிபை கொடுக்கிறார்கள். இதை நீங்கள் அறிந்து கொள்ள உங்கள் திறன்பேசியின் அமைப்புகள் (settings) இல் மென்பொருள் புதுப்பிப்பை கிளிக் செய்து புதிய பதிப்பு உள்ளது என்று காண்பித்தால் உடனே புதுப்பித்தல் செய்துவிடுங்கள். அதைப் போலவே அதே அமைப்புகளில் மென்பொருள் புதுப்பிப்பில் புதிய ஆன்ட்ராய்ட் புதுப்பிப்பு அல்லது மென்பொருள் புதுப்பிப்பு என்று கொடுத்திருந்தால் சிறிது நாட்கள் காத்திருந்து வலைத்தளங்களில் இந்த புதுப்பிப்பால் ஏதேனும் பிழைகள் அல்லது பிரச்சனைகள் உள்ளதா என்று தெரிந்துக்கொண்டு புதுப்பிப்பைச் செய்துக் கொள்ளுங்கள்.
இயல்பு உலாவி:
ஆன்ட்ராய்ட் திறன்பேசி பயன்படுத்தும் அனைத்து பயனர்களும் பயன்படுத்தும் ஒரே உலாவி, குரோம் மட்டுமே. ஏனேனில், கூகிளின் ஆன்ட்ராய்ட் இயல்பாகவே ‘குரோம்’ ஐ முதன்மை உலாவியாக வைத்திருக்கும். நாமும் அதையே பயன்படுத்துவோம். குரோம் இல் சில பிரச்சனைகள் உள்ளது. அது உங்கள் திறன்பேசியின் வேகத்தைக் குறைக்கும். அதுமட்டுமல்லாமல், உங்கள் கடவுச் சொற்கள் குரோம் உலாவியில் நீங்கள் அறிந்தோ அறியாமலோ சேமித்து வைத்திருப்பீர்கள். நீங்கள் உங்கள் திறன்பேசியை யாரிடமாவது கொடுக்கும் பொது அவர்களால் உங்கள் கடவுச் சொற்களைப் பார்க்க நேரிடலாம். அது போன்ற எவ்வித தவறுகளும் நடந்திடாமல் இருக்க நீங்கள் உங்கள் கடவுச் சொற்களை சேமிக்காமல் இருக்கவேண்டும்.
இது போன்ற தவறுகள் மேலும் நடக்காமல் இருக்க உங்கள் இயல்பு உலாவியை மாற்றிக்கொள்ளவேண்டும். மேலும் குரோம் உங்கள் தரவுகளுக்குப் பிரச்சனைகள் வரலாம். ஏனேனில் உங்கள் தரவுகளை வைத்தே உங்கள் உலாவியில் உங்கள் தேவைக்கேற்ப விளம்பரங்களைக் காட்டுவர். ஆகையால், உங்கள் தனியுரிமைக்கு எந்தவித பிரச்சனைகளும் வாராதவாரு உள்ள உலாவிகளை நீங்கள் பயன்படுத்துங்கள். அப்படி, உங்கள் இயல்பு உலாவியை மற்ற வேண்டும் என்றால் உங்கள் திறன்பேசியின் அமைப்புகளில் செயலி நிர்வாகத்தை கிளிக் செய்து இயல்பு செயலியை அழுத்தவும். அதில், உலாவி ஆப்ஸ் குல் சென்று நீங்கள் புதிதாக பதிவிறக்கம் செய்த உலாவியை தேர்ந்தேடுங்கள்.
பவர் ஆஃப்:
காலை கண் விழிப்பதும் திறன்பேசியிலே, இரவு கண் உறங்கபோவதும் திறன்பேசியிலே, நாம் அதை பயன்படுத்தாமல் ஒரு நாளும் உறங்கியதில்லை. ஆனால், உங்கள் திறன்பேசிக்கு உறக்கமே இல்லை. என்னடா, நாம் உறங்கும்போது திறன்பேசிக்கு வேலையே இல்லையே, அப்பொழுது அதுவும் உறக்கத்தில் தானே இருக்கும் என்று நீங்கள் யோசிப்பது எனக்கு புரிகிறது. ஆனால், உங்கள் திறன்பேசி நீங்கள் பவர் ஆஃப் செய்யும் வரை அது உறக்கதிருக்கு போகாது. ஏனேனில், உங்கள் திறன்பேசியில் வைத்த அலாரம், கடிகாரம் போன்ற விஷயங்கள் ஓடிக்கொண்டே தான் இருக்கும். இப்பொழுது உள்ள திறன்பேசி எல்லாம் நன்றாக தா வேலை செய்யும். இருப்பினும், நீங்கள் அதற்கு பத்து நிமிடம் ஆவது உறக்கம் கொடுக்கவேண்டும். அதற்கு வாரம் ஒரு முறை ஆவது நீங்கள் பவர் ஆஃப் செய்து வைக்க வேண்டும். இதனால், உங்கள் திறன்பேசியில் உள்ள பின்புலச் செயலிகளை முடிவிடும். இதனால், உங்கள் சாதனம் வேகம் குறையாமல் அப்படியே இருக்கும்.
செயலி அனுமதிகள்:
செயலி பயன்பாட்டில் முக்கிய கவனம் செலுத்த வேண்டியது, செயலி அனுமதிகள். ஆம், தேவையற்ற செயலி அனுமதிகள் உங்கள் தரவுகளுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்க நேரிடும். செயலி பயன்பாட்டின் பொது உங்களிடம் சில அனுமதிகள் கேட்கும். அதை நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ அதற்கு அனுமதி கொடுத்து பயன்படுத்த ஆரம்பித்துவிடுவீர்கள். ஆனால், அந்த அனுமதி அந்த செயலிக்கு தேவையுள்ளதா இல்லையா எனச் சிந்திக்க தவரிடலாம். உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு அலாரம் செயலியைப் பதிவிறக்கம் செய்துருப்பீர்கள் ஆனால், அந்த செயலி உங்கள் கேமரா அல்லது தொடர்புகளின் அனுமதியைக் கேட்கும். அவித நேரத்தில் நீங்கள் பொறுமையாக சிந்தித்து அனுமதி கொடுக்கவேண்டும். அப்படி, அது போல் ஏதேனும் ஒரு செயலிக்கு நீங்கள் கொடுத்துருப்பீர்கள் என்று நீனைத்தல் அதைப் பற்றி தெரிந்து கொள்ள, உங்கள் திறன்பேசியின் அமைப்புகளுள் செயலி நிரவாகதிற்குள் சென்று செயலி அனுமதிக்குள் பார்த்தால், நீங்கள் எந்த செயலிக்கு என்ன அனுமதிகள் எல்லாம் கொடுத்து இருக்குறிர்கள் என்று பார்க்கலாம். அதில், எந்த செயலிக்கு என்ன அனுமதிகள் எல்லாம் கொடுக்கலாம் என்று நீங்கள் தேர்வு செய்துக் கொள்ளலாம்.
4 Comments
ஸ்மார்ட்ஃபோன் என்பதன் தமிழ் சொல் திறன்பேசி
ReplyDeleteதிறன்பேசி என்ற சொல்லை கற்றுக்கொண்டேன்.
ReplyDeleteநான் பவர் ஆஃப் செய்யுரதே இல்ல
ReplyDeleteThe development of the smartphone was enabled by several key technological advances.
ReplyDeleteWelcome to News and Facts Tamil. If you like the content, feel free to comment on the above comment section. It will be grateful and encouraging to us for more blogs.